தேனி வாரசந்தையில் விழிப்புணர்வுடன் விற்பனை
தேனி வாரசந்தையில் விழிப்புணர்வுடன் விற்பனை 

      கொரோணா தொற்று பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் தேனி வாரச்சந்தையில் மக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்க குவிந்தனர். இதனை கட்டுப்படுத்த தேனி காவல்துறையினர் நீண்ட வெள்ளை கோட்டில் கட்டம் போட்டு அந்த கட்டத்திற்குள் மக்கள் நீண்ட வரிசையில் வந்து சந்தை முகப்பில் வைத்துள்ள கை கழுவும் இடத்தில் சோப்பு போட்டு கை கழுவிய பின்பே காய்கறி வாங்க சந்தைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர் . அதேபோல் தேனி நகராட்சி சுகாதார பிரிவு சார்பில் தேனி பகுதியில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் வணிக  நிறுவனங்களில் முன்பு வாகனத்திலிருந்து கிருமி நாசினி தெளித்து வருகின்றனர் இவன் :- சாதிக் பாட்சா நிருபர் தேனி மாவட்டம்.

" alt="" aria-hidden="true" />